தோழி: ஆர(ல்)மீன் குருகு பார்த்தே
அமைந்தவோர் நதியின் ஓரம்
நீரகல் தவளை கூவி
நித்தமும் சொல்லி நிற்க
வீரனை அணைந்த போது
வேறு,ஒரு சாட்சி யில்லை!
யாரிடம் சொல்லு வாய்நீ?
யாதுநாம் செய்யப் போமோ?
தலைவி: தேடிய கண்கள் சாட்சி;
திறந்தவாய் மீன்கள் சாட்சி!
கூடிய புட்கள் சாட்சி;
குளிர்மலை அருவி சாட்சி!
பாடிய குயிலும் சாட்சி;
பதுங்கிய நிலவும் சாட்சி!
ஓடிய தலைவ னோடென்
உள்ளமும் இருக்கும் சாட்சி!
†
அமைந்தவோர் நதியின் ஓரம்
நீரகல் தவளை கூவி
நித்தமும் சொல்லி நிற்க
வீரனை அணைந்த போது
வேறு,ஒரு சாட்சி யில்லை!
யாரிடம் சொல்லு வாய்நீ?
யாதுநாம் செய்யப் போமோ?
தலைவி: தேடிய கண்கள் சாட்சி;
திறந்தவாய் மீன்கள் சாட்சி!
கூடிய புட்கள் சாட்சி;
குளிர்மலை அருவி சாட்சி!
பாடிய குயிலும் சாட்சி;
பதுங்கிய நிலவும் சாட்சி!
ஓடிய தலைவ னோடென்
உள்ளமும் இருக்கும் சாட்சி!
†