மேலோர் உரைசெயும் மேன்மையனை, மானிடருள்
நூலோர் நுவல்பொருளை, நித்தியத்தைக் -காலாறச்
சென்று துதிசெய்வார் சீரெய்த, எய்தாரே
ஒன்றைத் துதிசெய்யா தோர்!
வருந்தி உழன்றேன்முன் வாரானாய்த் தான்அன்று
இருந்த மகனாம்கோல்! ஈதென்று -அரும்பவிழும்
கூந்தல் மடமகளும் கேட்டிடுவாள்! நான்கண்டு
நீந்தும் திறன்,அறியாப் போது !
வாரும் உடனென்ன வாராராய்ப் போ,எனவே
கூறி இருந்தவரோ கூறிடுவாய்! -நாரியருள்
மேன்மை பலகொண்ட மெல்லியலாய்! என்,அன்பர்
பான்மை தனைநீயும் பார்த்து!
ஆசை விழிவழியே அன்பின் பொருள்தன்னை
ஊசல் மனத்தோடும் ஒண் தொடியே! -நேசரவர்
காணக் களிகொண்டு கட்டுரைத்தேன்! காணார்போல்
மாணக் கிடந்தார்கொல்! மெய்!
உந்தும் மனத்தசை ஓரானோ? ஊர்அறியச்
சொந்தம் எனக்கையும் சேரானோ? -சந்ததமும்
உள்ளத்து இருந்தே ஒறுப்பதேன்? பல்பொருளைக்
கொள்ளத் தலஞ்சென்ற கோ!
கோன்சொலச் சென்ற கொற்றவர் முல்லையில்
தான்வரு வேன்,எனல் தப்பாச்சே! -வான்வரு
தண்மதி போன்ற,என் தையலே! என்னுளம்
கண்ணுறங் காதது காண்!..
-௦-
நூலோர் நுவல்பொருளை, நித்தியத்தைக் -காலாறச்
சென்று துதிசெய்வார் சீரெய்த, எய்தாரே
ஒன்றைத் துதிசெய்யா தோர்!
வருந்தி உழன்றேன்முன் வாரானாய்த் தான்அன்று
இருந்த மகனாம்கோல்! ஈதென்று -அரும்பவிழும்
கூந்தல் மடமகளும் கேட்டிடுவாள்! நான்கண்டு
நீந்தும் திறன்,அறியாப் போது !
வாரும் உடனென்ன வாராராய்ப் போ,எனவே
கூறி இருந்தவரோ கூறிடுவாய்! -நாரியருள்
மேன்மை பலகொண்ட மெல்லியலாய்! என்,அன்பர்
பான்மை தனைநீயும் பார்த்து!
ஆசை விழிவழியே அன்பின் பொருள்தன்னை
ஊசல் மனத்தோடும் ஒண் தொடியே! -நேசரவர்
காணக் களிகொண்டு கட்டுரைத்தேன்! காணார்போல்
மாணக் கிடந்தார்கொல்! மெய்!
உந்தும் மனத்தசை ஓரானோ? ஊர்அறியச்
சொந்தம் எனக்கையும் சேரானோ? -சந்ததமும்
உள்ளத்து இருந்தே ஒறுப்பதேன்? பல்பொருளைக்
கொள்ளத் தலஞ்சென்ற கோ!
கோன்சொலச் சென்ற கொற்றவர் முல்லையில்
தான்வரு வேன்,எனல் தப்பாச்சே! -வான்வரு
தண்மதி போன்ற,என் தையலே! என்னுளம்
கண்ணுறங் காதது காண்!..
-௦-
[1963-இல் எழுதியது-உரை கேட்க வேண்டாம்]