Thursday, December 6, 2012

குறு குறுப்பாக்கள்-10


காதல் சிறகை
காற்றினில்  விரித்து
வான வீதியில்
பறக்க வா!
கரியடுப் புக்கும்
மண்ணெண்ணைக்கும்
கண்ணீர் சிந்துதல்
மறக்க வா!
------
நீரைப் பின்னுக்குத் தள்ளி
முன்னே செல்லும் கப்பல்
காற்றைப் பின்னுக்குத் தள்ளி
முன்னே போகும் வானூர்தி!
இந்தப் பூமியைப்
பின்னுக்குத் தள்ளியா
நான் முன்னே போவேன்?
எந்த இடத்துக்கு..?

No comments:

Post a Comment