Thursday, December 6, 2012

குறுகுறுப் பாக்கள்-08


ஒரு குடியானவனின் புலம்பல்.. 

மடிமீது 
தலைவைத்து 
விடியும்வரை 
தூங்கினோம்... 
மறுநாள் 
எழுந்து பார்த்தோம் ... 
குடிசையைக் காணவில்லை..! 
*************************************************
 

ஒரு அரசியல்வாதியின் அங்கலாய்ப்பு.. 

மானியங்களைக் 
கொடுத்துதான் 
மக்களைக் 
காப்பாற்ற வேண்டுமா..? 
மக்களை 
நாடுகடத்துங்கள்.. 
மானியத்தைக் காப்பாற்றுங்கள் ..! 
****************************************************

No comments:

Post a Comment