Thursday, December 6, 2012

தூங்கும் விவேகம்..


திட்டம் போட்டுத் 
திருடுற கூட்டம் 
திருடிக்கொண்டே 
இருக்குது....அவை 
கட்டும் கொடிகள் 
மட்டும் மாறுது 
காரியம் முன்போல் 
நடக்குது.. 

வெட்டிப் போட்டு 
அழித்த காட்டின் 
வேழக் கூட்டம் 
வீட்டிலேயே !...அவை 
விளைச்சலைத் தேடி 
வெறியாய்க் கிளம்பின 
விவேகம் உனக்குள் 
தூங்குது.. 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


No comments:

Post a Comment