முட்டும் துயர்மறந்து, முன்னூறு நாள்சுமந்து,
துட்டன் எனைஈன்றாள் துன்பமுற - முட்டமுட்ட
வைத்தியம்,இல் லாது,உன் வழிவந்தேன், ஆதலினால்
பைத்தியமே சாலும், பகர்!
செல்லக் குழந்தை,எனச் சீராட்டிப் பாராட்டிக்
கல்வி அறிவு,எனக்குக் காட்டியவர் -அல்லல்,உற
வைத்துனைஎன் நெஞ்சில் வழிபாடு செய்தேனால்
பைத்தியமே நன்றாய்ப் பகர்!
எழுபிறப்பும் நின்றுதவி இம்மைக்கு,என் றில்லா
முழுமைதரு கல்வி முழுதும் - பழுதாக
வைத்தபடி இன்றெதுவும் வாய்த்திலனாய் நிற்பதால்
பைத்தியமே நன்றாய்ப் பகர்!
சின்,நடைகண்டு அன்று சிரித்தாளும், என்சிறிய
இன்னகைகண்டு உள்ளம் இழந்தாளும் - வன்னடையால்
கைத்த,மனம் கொண்டு கலக்கமுறச் செய்தேனால்
பைத்தியமே இன்னும் பகர்!
நல்லமகன் இல்லையென நற்றாயும், கல்விவழிச்
செல்லும்.மகம் இல்லையெனச் சேர்ந்தோரும் -எல்லோரும்
கைத்து,வைத்துச் சொன்னபொருள் காணேன்;பின் வந்ததனால்
பைத்தியமே என்று பகர்!
உறவினர்தம் உள்ளமும், இவ் வூரினர்தம் வாயும்
கரைதுடைக்கும் எம்நண்பர் கண்ணும் -உற,வருத்தம்
வைத்தவன்,என் நெஞ்சம் வருத்தம்,அறி தல்வேண்டிப்
பைத்தியம்,என் றாய்,நீயே பார்த்து !
நாடாதே! என்றன்று நன்முறையில் தாய்சொல்லத்
தேடாதே நான்வந்து தேடினன்பார்! -வாடாமல்
புத்திசுவா தீனமிலான் போல்,ஆம்,என் செய்கைஎனப்
பைத்தியம்,என் றாய்,அறிவாய்ப் பார்த்தது!
கைத்திறலோன் ஆற்றிக் கடைந்தெடுத்த சிற்பமே,
பொய்த்திறலோன் என்றவனைப் பொய்த்திடுமேல்- பைத்தியமே!
போற்றும்,அவன் சிற்பம் புகழுக் குரித்தாமோ?
ஏற்றம்அவ னோடதற்கு மே!
பைத்தியமென் றாலும்,உன் பைத்தியமே நான்!எனது
பைத்தியமே! நீ,உனதன் பைத்திருத்தி -வைத்தியரால்
வேறாகச் சென்று விலகுதலும் வேண்டாம்,பூ
நாறாக வாழ்வோம்,வா நாம்!

-௦- [1965-இல் எழுதியது] -0-
No comments:
Post a Comment