Thursday, December 6, 2012

குறுகுறுப் பாக்கள்-11


படர்தாமரைக்குக் 
களிம்பு.. 
உடல்கிருமிக்குச் 
சோப்பு.. 
வாய் நாற்றத்துக்கு 
பற்பசை.. 
அரசியல் வியாதிக்கு 
ஆ இதமா ஒரு மருந்து 
சொல்லுங்களேன்! 
******************************************
 
இளைஞனே! 
படி! படி! 
எழுத மட்டுமாவது 
நீ படி! 
இறங்கிவந்து 
சரக்கடி! 
இருப்பவர்கள் 
அடிப் பிடி! 
இசைந்தவர்க்குக் 
கொடி பிடி! 
எதற்கு உனக்கு 
அடி தடி! 
எல்லாமே 
வாழ்கையின் படி! 
படி!படி! 
****************************************

No comments:

Post a Comment