Wednesday, August 29, 2012

சிரிப்பிலே எழுந்த கவிதை..!


வானம் சிரிக்கக் கண்டேன் --மழைநீர்
வந்தே விழுந்தது!
மேகம் சிரித்து நின்றது --கண்ணில்
மின்னல் தெறித்தது!
நிலவு சிரித்து மறைந்தது --வின்மீன்கள்
வானை நிறைத்தன!

கடலும் சிரித்துக் குதித்தது --மீன்கள்
கரையில் துள்ளின!
அலைகள் சிரித்து நகர்ந்தது- கரையில்
அலவன் ஒளிந்தது!
மரங்கள் சிரித்து நின்றன--கிளையில்
மலர்கள் மணந்தன!

களவு சிரித்துக் கலந்தது --ஊருள்
அலர்கள் பரந்தது!
உழைப்புச் சிரித்துக் களைத்தது --உடலில்
வேர்வை பூத்தது!
குழந்தை சிரித்த போதோ --எதிரில்
கடவுள் தெரிந்த்து!

என்னவள் சிரித்து நகர்ந்தாள் --நெஞ்சில்
ஏக்கம் பிறந்தது!
எட்டி நடந்து மறைந்தாள் -என்முன்
பிரிவு சிரித்தது!
கவிஞன் சிரித்து நின்றான்--உமக்குக்
கவிதை கிடைத்தது!

< 0 >