Thursday, December 6, 2012

குறுகுறுப் பாக்கள்-07


வெயிலும் பனியுமா 
விளைவித்தது 
இந்தச் சுருக்கங்களை! 
இல்லை இல்லை 
விழுந்த பள்ளங்களை 
விட்டெழுந்த 
முயற்சிகள் அவை! 
******************* *********************
 
ஓட்டைப் பாத்திரத்தில் 
ஊற்றுகிறாயே 
அமுதத்தை.. 
தமிழை.. 
ஒருவருக்கும் பயனின்றி 
ஒழுகிடவோ? 
****************** ***********************
 
சிவனே என்றிருப்பவனுக்கே 
விஷத்தைக் கொடுத்தது 
இந்த உலகம் .. 
சீறி எழுபவனுக்கு 
அமுதமா 
கொடுக்கப் போகிறது..? 
*************** ************************

No comments:

Post a Comment