அகிலம் முழுதும் ஒன்றாய் வாழ
ஆவன செய்வோமே! - அதற்காம்
ஆவணம் செய்வோமே! -நல்
முகிலும் வானும் போலே இணையும்
முயற்சிகள் செய்வோமே! - நமது
முயற்சியில் உய்வோமே!
பகையும் வறுமைப் பிணியும் தீரப்
பணிகள் எடுப்போமே! -இன்னும்
பணிகள் கொடுப்போமே! -நல்ல
நகையும் நட்பும் அன்பும் நெஞ்சில்
நட்டதை வளர்ப்போமே! -நிலையாய்
நட்டதில் வளர்வோமே!
சொல்லும் செயலும் சிந்தனை அழகும்
சோம்பிடப் பண்ணோமே! -நாமதை
ஓம்பிடக் கண்ணாமே! -தருமம்
வெல்லும் வெல்லும் வெல்லும் என்பது
விளங்கிடும் பண்ணாமே! -ஞாலம்
விளங்கிடும் ஒண்ணாமே!
கல்லும் முள்ளும் கிடக்கும் நிலத்தில்
கழனிகள் காண்போமே! -எதிலும்
விழலினிக் காணோமே!
புல்லும் பூண்டும் பாரதப் புகழைப்
பேசிடக் காண்போமே! -இனிப்
பேசிடக் காண்போமே!
நல்லோர் வாயில் நல்லன கேட்டு
நன்மைகள் பெறுவோமே! -பலவாம்
நன்மைகள் பெறுவோமே! -ஒன்றாய்ப்
பல்லோர் கூடிப் பகுத்துணும் நிலையே
பண்பெனத் தருவோமே! -உலகில்
பண்பெனத் தருவோமே!
எல்லா நாட்டின் மக்களும் இங்கே
எம்முடன் பிறந்தோரே! -இங்கே
எம்முடன் பிறந்தோரே - நம்
எல்லாக் கைகளும் சேர்ந்தே செயல்பட
எல்லைக டந்தோமே! - இன்ப
எல்லைக டப்போமே!
< 0 >
ஆவன செய்வோமே! - அதற்காம்
ஆவணம் செய்வோமே! -நல்
முகிலும் வானும் போலே இணையும்
முயற்சிகள் செய்வோமே! - நமது
முயற்சியில் உய்வோமே!
பகையும் வறுமைப் பிணியும் தீரப்
பணிகள் எடுப்போமே! -இன்னும்
பணிகள் கொடுப்போமே! -நல்ல
நகையும் நட்பும் அன்பும் நெஞ்சில்
நட்டதை வளர்ப்போமே! -நிலையாய்
நட்டதில் வளர்வோமே!
சொல்லும் செயலும் சிந்தனை அழகும்
சோம்பிடப் பண்ணோமே! -நாமதை
ஓம்பிடக் கண்ணாமே! -தருமம்
வெல்லும் வெல்லும் வெல்லும் என்பது
விளங்கிடும் பண்ணாமே! -ஞாலம்
விளங்கிடும் ஒண்ணாமே!
கல்லும் முள்ளும் கிடக்கும் நிலத்தில்
கழனிகள் காண்போமே! -எதிலும்
விழலினிக் காணோமே!
புல்லும் பூண்டும் பாரதப் புகழைப்
பேசிடக் காண்போமே! -இனிப்
பேசிடக் காண்போமே!
நல்லோர் வாயில் நல்லன கேட்டு
நன்மைகள் பெறுவோமே! -பலவாம்
நன்மைகள் பெறுவோமே! -ஒன்றாய்ப்
பல்லோர் கூடிப் பகுத்துணும் நிலையே
பண்பெனத் தருவோமே! -உலகில்
பண்பெனத் தருவோமே!
எல்லா நாட்டின் மக்களும் இங்கே
எம்முடன் பிறந்தோரே! -இங்கே
எம்முடன் பிறந்தோரே - நம்
எல்லாக் கைகளும் சேர்ந்தே செயல்பட
எல்லைக டந்தோமே! - இன்ப
எல்லைக டப்போமே!
< 0 >
No comments:
Post a Comment