Monday, January 2, 2012

புத்தாண்டின் வாழ்த்துக்கள்…





உறக்கத்தை விட்டெழுவோம் ஊக்கம்  தூக்கி உறவைக் கூட்டி,
துறக்கத்தைப் பூமியிலே சமைப்போம் ஒன்றாய்! வந்தே வாழ்ந்து
இறக்கத்தான் வாழ்வென்றால் இங்கி ருக்கும் மரங்கள் கூட
கரங்கொட்டி நகையாவோ? கைகள் சேரும் பூமி காப்போம்!

மணலில் எழுதும் எழுத்தல்ல!
மறைந்து கிடக்கும் நினைவல்ல!
கனவில் கிடைத்த பொருளல்ல!
கதிரால் மறையும் பனியல்ல!
உணவில் கிடைக்கும் சுவையல்ல!
உண்டே உறங்கல் வாழ்வல்ல!
மணத்தைப்  பின்வைத்து ஒருநாளில்
மறையும் பூக்கள் போலல்ல!
குணத்தில் இயேசு போல்வாழ்வீர்!
குறைகள் அவரே தீர்ப்பாரே!

எல்லா நலனும் எல்லா வளனும்
எல்லா ருக்கும் கிடைக்க என்றும்
எல்லாப் மகிழ்வும் எல்லாப் புகழும்
எல்லை யின்றிப் பெருவீர் வாழ்க!

புதிய விடியல், புதுநம் பிக்கை
புதிய வளத்தின் மகிழ்ச்சியிது!
புதிய எண்ணம் புதிய சொற்கள்
புதிய செயல்களின் தொடக்கமிது!
புதிய சக்தி புதிய பலமிது
புதிய சிந்தனை நாளுமிது!
புதிய வானம் புதிய பூமி
புதிதாய்த் தொடங்கும் வேளையிது
புதிய நட்பு புதிய அன்பு
புதிதாய்ச் சேர்க்கும் பிரார்த்தனையின்
புதிய கூட்டின் புதிய வாழ்விது!
பொங்கும் நன்மைகள் பூக்கவிடு!
புதிய ஆண்டில் புதிதாய் வாழ்ந்து
புதிய உலகம் படைத்து எழு!

No comments:

Post a Comment