பாவாணர் வானத்துப் பிள்ளைநிலா கண்தூங்கிப்
போவானேன்? எம்மைப் பிரிவானேன்?-கூவியழும்
பிள்ளைக் குரல்களுக்குத் தாலாட்டாய்ப் பாடியவாய்
கொள்ளை யடித்ததார் கொல்! 01
பிஞ்சுக் கரங்களுடன் பேனா உறவாடக்
கொஞ்சும் மொழிகளிலே கொள்கைநலம் – விஞ்ச
உரைத்தார் இவரினும் உண்டோ? தமிழும்
நரைத்தே அறிந்திலன் நான்! 02
சொல்லெளிதாம் தண்டமிழில் சோர்வின்றித் தான்கண்ட
நல்லன,எல் லாமே நவின்றார்;அச் – செல்வமதை
வானோர் குழந்தைகட்கும் வாரிக் கொடுத்திடவோ
தானேறிப் போனாரவ் வான்! 03
< 0 >
No comments:
Post a Comment