வெள்ளைச்
சலவைத் தாளிலும் இருப்பாய்!
வேண்டி இறைஞ்சும் குரலிலும் இருப்பாய்!!
கொள்ளை யடிக்கும்
கும்பலில் இருப்பாய்!
குடிம கன்களின் நாவிலும் பிறள்வாய்!
கள்ளமற்
றோரின் கருத்துளும் இருப்பாய்!
கருணைக் கலைவோர் கைப்பை ஒளிப்பாய்!
உள்ள தாம்பொருள்
உன்னையே தேடி
உழைப்பேன் என்கை உரசயேன் மறுப்பாய்?
மாதர் சிமிட்டும்
கண்களில் ஒளிர்வாய்!
மக்கள் கொஞ்சும் மழலையில் தவழ்வாய்!
கீதம் இசைக்கும்
தட்டினிற் சுழல்வாய்!
கிழவர் ஏக்கக் கண்களில் துடிப்பாய்!
போதைப் பொருட்களில்
தடுமா றிடுவாய்!
புண்ணியக் கோயில் உண்டியல் விழுவாய்!
வாதப் பண்டிதர்
வாக்கினில் நடிப்பாய்!
மாடாய் உழைப்பேன் மறைந்தெங் கிருப்பாய்?
No comments:
Post a Comment