பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றப்
பிறர்க்குதவி இறைத்தொண்டாய் ஆற்ற,
அறிவின்கண் அகங்காரம் நீக்க,
‘அடுத்தவரின்' பிழைமறந்து தூக்கத்
தெரிந்தவர்பால் கோடாமை ஊக்கித்
தெளிந்தமதி யுள்ளவனாய் ஆக்கி,
வறியனெனை உயர்த்திடுவார் ஏசு!
வாயார அவர்புகழைப் பேசு!
செறிந்தபொருள் கவிதையிலே வேண்டு மென்றால்
சிந்தையிலே அதுமுதலில் பிறக்க வேண்டும்!
எறிந்தபொருள் கீழிறங்கும் இலகு போல
எடுத்தோத, அதுகாதில் இறங்க
வேண்டும்!
அறிந்தவர்கள் மட்டுமிலா தனைத்துப் பேரும்
அனுபவிக்கும் திறன்வேண்டும்,
ஆர்வம்
வேண்டும்,
அறிந்தவனே! ஏசப்பா! அன்பின் ஊற்றே!
அடியேனை வழிநடத்தும் அடுத்த ஆண்டும்!
No comments:
Post a Comment