01. உண்டால் அம்ம! உலகம், உழைப்பவர்
கொண்டாடு மட்டும் குறித்து!
02. ஆளும் அரசுக்கும் ஆணி உழைப்பவர்;
வீழும் அவரின்றி வேந்து!
03. சூழும் நலங்களே சொல்லாவோ? வாழும்
உழைப்பே உயர்வுக் கழைப்பு!
04. அம்ம! அரிவை முயக்கினும் நன்றுகொல்!
தம்மை உயர்த்தும் உழைப்பு!
05. பாடுற்றார் உண்டு பலரே; உழைப்பினால்
கேடுற்றர் உண்டோ?சொல் கேட்டு!
06. அன்பும் அறமும் அமைந்தோர்க்கே நல்லுழைப்பின்
இன்பும் பயனும் இயல்பு!
07. உழைப்பெனும் ஊட்டினால் 1ஓரைந்தும் காப்பான்
அழைப்பிலா வானோர் விருந்து !
08. உழைப்பே உயர்வுக் கழைப்பாம்! உணர்ந்து
களிப்போம் களைப்பைக் களைந்து!
09. கோளில் உழைப்பைக் கொடுப்பவர் தாளினை
நாளும் வணங்குவோம் நாம்!
[1. தான்,
தன்குடும்பம்,
தன்தொழிலகம்,
சமூகம்,
நாடு
-என்ற ஐந்து]
No comments:
Post a Comment