காலங்கள் தோறும் கனமழை வந்து
களிப்புக் கூட வேண்டும் -இறைவா
கனிவு சேர்க்க வேண்டும்.
ஓலங்கள் மறி ஒற்றுமை தேறி
உதவி வாழ வேண்டும் -இறைவா
உந்தன் ஆசி வேண்டும்!
ஒப்பனை இல்லா உணர்வுகள் ஒன்றி
உயிர்கள் களிக்க வேண்டும் -இறைவா
உலகு செழிக்க வேண்டும்!
சொப்பன மில்லா சுவர்க்கமும் இங்கே
சுயத்தில் தொடங்க வேண்டும் -இறைவா
சுற்றிப் பெருக வேண்டும்!
நாடி ஓடியே நல்ல செல்வமே
நாளும் சேர்க்க வேண்டும் -இறைவா
நலிவு போக்க வேண்டும்!
பாடி ஆடியே பரமன் உன்முனே
படையல் போட வேண்டும்! -இறைவா
பகிர்ந்து உண்ண வேண்டும்!
தன்னை உணார்ந்து தவறுகள் போக்கத்
தயவு செய்ய வேண்டும்! -இறைவா
தடைகள் நீக்க வேண்டும்!
முன்னிலும் புதிய ஆண்டினை எங்கள்
முன்பு கூட்ட வேண்டும்! -இறைவா
முழுமை யூட்ட வேண்டும்!
<0>
களிப்புக் கூட வேண்டும் -இறைவா
கனிவு சேர்க்க வேண்டும்.
ஓலங்கள் மறி ஒற்றுமை தேறி
உதவி வாழ வேண்டும் -இறைவா
உந்தன் ஆசி வேண்டும்!
ஒப்பனை இல்லா உணர்வுகள் ஒன்றி
உயிர்கள் களிக்க வேண்டும் -இறைவா
உலகு செழிக்க வேண்டும்!
சொப்பன மில்லா சுவர்க்கமும் இங்கே
சுயத்தில் தொடங்க வேண்டும் -இறைவா
சுற்றிப் பெருக வேண்டும்!
நாடி ஓடியே நல்ல செல்வமே
நாளும் சேர்க்க வேண்டும் -இறைவா
நலிவு போக்க வேண்டும்!
பாடி ஆடியே பரமன் உன்முனே
படையல் போட வேண்டும்! -இறைவா
பகிர்ந்து உண்ண வேண்டும்!
தன்னை உணார்ந்து தவறுகள் போக்கத்
தயவு செய்ய வேண்டும்! -இறைவா
தடைகள் நீக்க வேண்டும்!
முன்னிலும் புதிய ஆண்டினை எங்கள்
முன்பு கூட்ட வேண்டும்! -இறைவா
முழுமை யூட்ட வேண்டும்!
<0>
No comments:
Post a Comment