‘தொடுவானம் போலிருக்கும் சிலரின் நெஞ்சம்!
தொட்டுவிடப் போனாலோ தொலைவே
மிஞ்சும்’
எடுப்பான இவ்வரிகள் எவர்கைத்
தஞ்சம்?
எழுதியவர் அய்யாறு வாசு தேவன்!
மிடுக்காக இதையெடுத்து வேழ வேந்தர்
மேற்கோளாய்ச் சொல்லிடுவார்! மீண்டும்
மீண்டும்
படிக்காதார் யாருண்டு? படித்துத் தானே
பயில்கின்றேன் தொடுவானக் கவிதை இங்கு!
No comments:
Post a Comment