சுற்றுப் புறத்தினை முற்றுங் கெடுத்தது
பற்றிச் சினந்திடல் மாணடி! மேகம்
சுற்றி முகத்திலே நெற்றி மறைத்துநீ
ஒற்றி நடப்பது வீணடி -நிலவே!
முற்றிக் குறைவது நாணடி! 01
கல்வி சிறந்தவர் வெல்லும் மொழியினர்
சொல்ல மறுப்பதுன் சோகமோ?-நெஞ்சம்
கல்லென் றிருத்திநீ புல்லென் றுனக்குளே
மெல்லக் கறுவுதல் ஆகுமோ? -நிலவே
சில்லென் றிருப்பதும் போகுமோ? 02
ஏரி மடக்கியே கூரை போடுவார்
சேரி உயர்த்திடப் பாடுவார் -நாங்கள்
‘லாரி’ நிரப்பியே சேரும் வாக்குகள்
வாரி இறைத்திடல் குமுறியோ -நிலவே
‘காரி’ பனியென உமிழ்வையோ? 03
நல்ல நினைப்பினர் வெல்லும் முனைப்பினர்
மெல்ல இணைந்தனர் பாரடி -நாளை
சொல்லும் வகையினில் சூழும் தேர்தலில்
செல்லும் பதில்தரு வாரடி! -நிலவே
அல்கும் முகக்குறை தீரடி! 04
< 0 >
No comments:
Post a Comment