Friday, November 18, 2011

குறும்பாக்கள்..

ஏறும் விலைவாசிக்கு

ஏணி வைத்திடுவோம்..
வறுமைக் கோட்டின்
வரம்பை உயர்த்துவோம்..
              ======

மக்கள்(சன) நாயகம்..

   மக்களுக்காக
   மக்களை வைத்தே
   மக்களைக்
   கொள்ளையடிப்பது

                 ========

இந்திரனுக்கு இருக்கட்டும்
உடம்பெல்லாம் கண்கள்..
எனக்கு வேண்டியது
இருப்பைச் சுற்றி
ஏராளமான கைகளே..
இலவசங்கள் வாங்க..

                ==========

கருப்பினை அன்று
காகிதம் மணந்தது..
கைகளில் அன்று
கவிதை பிறந்தது..
வெறுப்பினை இயேசுவின்
பொறுமையும் வென்றது..
விடியலைச் சிலுவையில்
உலகமும் கண்டது..

                        †

2 comments:

  1. அய்யா உமது குறும்பாக்கள் அனைத்தும் இனித்திடும் கரும்பு பாக்கள்

    ReplyDelete