Friday, August 26, 2011

தேடி வந்த இறைவன்

ஆடி ஆடி மகிழ்ச்சி கூட்ட
   அசைந்து வாராத் தெய்வம்!
கோடி கோடி இன்பம் தரவே
   கூட்ட வந்த தெய்வம்!
தேடித் தேடி நடந்து சென்றே
   தேவை கேட்ட தெய்வம்!
ஓடி ஓடிச் சேவை செய்து
   மாய்ந்தும் ஓயாத் தெய்வம்!
(வேறு)
வந்தார் இறைவன் வந்தார்- பதைத்துப்
படைப்பைக் காண வந்தார் - நமது
வேளை சரிசெய வந்தார்! -தாம்
பரத்தை விட்டே வந்தார்!- சின்ன
ஆவடிக் கிடையே வந்தார்! -தம்
மாபலம் விட்டே வந்தார்!  ‘ஏதேன்’  
அடையார்  எண்ணி வந்தார்! -நமது
பழவினை தாங்கி வந்தார்! - நெஞ்சைக்
கிண்டி உணர்த்தவே வந்தார்! -சீடர்திரு
ஆன்ம ஊரினுள் வந்தார்!- -தீநகர்
நம்முள் அழியவே வந்தார்!- நம்முள்
சாந்தம் பெருகவே வந்தார்! -கோட்டை
நமக்கென எழுப்ப வந்தார்!

எரிந்து பாவமும் மறைமலையில்
  இழிந்து பொழிந்து வந்தார்!
விரிந்த கைகளைத் தூக்கித் திரி
  சூலமாய் எழுந்து சிறந்தார்

வந்தார் இறைவன் வந்தார் தமது
  ஆட்சியைக் காட்ட வந்தார் - நமக்கு
மீட்சியைக் கூட்ட வந்தார்!

No comments:

Post a Comment