Friday, August 26, 2011

ஈசனோடிருக்க

வேசி மனத்தின் தாசனாய் இருந்தால்
ஆசைப் பட்டே அழிவ துறுதி !
யோசனை செய்தே வாசனை யென்றிதை
ஈசனின் அன்பர் எண்ணுவர் ஏற்கிலர்!
ஊசலும் ஓரிடம் நிற்கலாம், நில்லா
ஆசைகள் எதிலும் அடங்குதல் இல்லையே!
ஈசனுக்கு எடுக்கும் பூசையின் போதும்
வாசனை யெழும்பும் வாய்ப்புகள் உண்டால்
ஈசனோ டாயினும் ஆசைகள் அறுக்க
நேசரும் சொன்னார்; நினைத்திடு! விழித்திடு!
பாசமோ ஆசையின் பற்றுமோர் விசையே!
ஊசியின் காதுபோல் உனக்கது தோன்றலாம்!
ஏசுவும் அதனால் எடுத்திது சொன்னார்:
காசினைப் பற்றிய கையினர்
ஈசனோ டிருத்தல் இயலா து’என்றே!

No comments:

Post a Comment