சிறகை விரிப்பாய்! சிகரம் தொடுவாய்!
சிந்தனை செய்வாய் மானிடனே!
உறவை வளர்ப்பாய் உலகை வெல்வாய்
உண்மை இதுதான் மானிடனே!
ஒருமரக் கூட்டில் உறவுகள் தொடங்கும்
உலகம் அழைக்கும் வரைதானே!
சிறுபற வைக்கும் சிறையது வாகும்
சிறகடித் தோடும் வரைதானே!
ஒருமரம், தோப்போ? ஒருவீடு ஊரோ?
உலகை விடுத்து வாழ்வாயோ?
பெருமைகள் அழைக்கும் பிறப்புன தாகும்
பிரிவினை கொண்டே மாள்வாயோ?
சிறுதொழு வொன்றில் பிறந்தவர் எனினும்
சிந்தனை விரித்து நின்றாரே!,
நிற,இன பேதம் நீக்கியெல் லோரும்
நிலைபெறச் சிலுவையில் வென்றாரே!
No comments:
Post a Comment