Friday, August 26, 2011

எண்ணிப் பார்ப்போம்


வில்லணைந்து வேல ணைந்து
        வீரவாள் தாம ணைந்து
மல்லணைந்து பூமி பற்றும்
        மதியணைந்த மனித னே!கேள்!
புல்லணைந்து போகும் போது
        புவியினுக் கரசர் ஏசு
புல்லணைமேல் பிறந்தன் பாலே
        புவியணைத்தது உன்னுள் எண்ணு!

கல்லெடுத்து நீரெ டுத்து
         கானகத்து மரமெ டுத்து
‘வில்’லெடுத்த மாளி கைகள்
         வெவ்வேறாம் இடமெ டுத்துப்
புல்லெடுத்த பூமிக் குள்ளே
         போனவர்கள் மத்தி வந்து
புல்லுடுத்த தொழுப்பி றந்து
                                  புவியெடுத்த பிரானை எண்ணு!

No comments:

Post a Comment