Tuesday, July 16, 2013

துயரம் நினைத்துத் துவளா திருப்பாய்! 
அயரா நெஞ்சின் அமைதி காப்பாய்! 
இறையை நம்ப்ய்!அவர் இரக்கம் தேடு!உன் 
அறையுள் அமர்ந்தே அவர்துணை நாடு! 
தொழுதுன் மனத்தே அழுது வேண்டு! 
செவிசாய்த்து உனது குவிவாய்ச் சொற்கள் 
அவியாய் ஏற்று,உன் தவிப்பை நீக்கக் 
கோலும் கழியும் கொண்டே வந்து 
சால,உன் துயர்கள் சரிசெய் திடவே, 
எழுவார்! உதவி விழுதாய் இறங்கும்! 
சிரசைக் கத்துச் செம்மையின் நடத்தி 
நிரப்புவார் உயர்வால்! சிறப்புகள் சேர்ப்பார்! 
பல்லா யிரமாம் பகைவரும் அழிவர்! 
நல்லார் உறவும் நனிபெருக்கு எடுக்கும்! 
பொல்லாங்கு உரைப்போர் பல்லுடை படுவர்! 
செல்லாது அவர்தம் செயலும் சொல்லும்! 
நில்லாது அகல்வர்! நேரினித் தோன்றார்! 
சொல்வாய் நிறைந்த அல்லே லூயா! 
கடுமையின் நீங்கிக் கர்த்தரே! 

விடுதலை தருவார்! விளங்குவாய் நிலைத்தே! 

No comments:

Post a Comment