Tuesday, July 16, 2013

அன்பு.  .02-2012 06:44:28 PM
                  [B]

அன்பெனில் பொறாமை யில்லை! 
அன்பெனில் பெருமை யில்லை! 
அன்பெனில் இறுமாப் பில்லை! 
அன்பெனில் பேத மில்லை! 
அன்பெனில் கோப மில்லை! 
அன்பெனில் சாப மில்லை! 
அன்பெனில் ஓரம்இல்லை! 
அன்பெனில் கோரம் இல்லை! 01 

அன்பெனில் நம்ப வேண்டும்! 
அன்பெனில் சகிப்பு வேண்டும்! 
அன்பெனில் பொறுமை வேண்டும்! 
அன்பெனில் கருணை வேண்டும்! 
அன்பெனில் நேர்மை வேண்டும்! 
அன்பெனில் நியாயம் வேண்டும்! 
அன்பெனில் உண்மை வேண்டும்! 
அன்பெனில் மகிழ்ச்சி வேண்டும்! 02 

என்மொழி எதுவா னாலென்? 
என்பொருள் அன்பா கட்டும்! 
என்பலம் எதுவா னாலென்? 
என்பலன் அன்பா கட்டும்! 
என்கொடை எதுவா னாலென்? 
என்செயல் அன்பா கட்டும்! 
என்குணம் எதுவா னால்என்? 
என்மணம் அன்பா கட்டும்! 03 

< 0 >

No comments:

Post a Comment