Tuesday, July 16, 2013

                       03-02-2012 05:58:40 PM

கண்ணீரைத் தினங்குடித்துக் காத்திருக்கிறேன்-உன் 
காலடியில் நான்நடந்து சோர்ந்திருக்கிறேன்! 
தண்ணீரைத் தேடுகின்ற கலைமான்போல-உன் 
தவிப்பிலே இரவுபகல் தனித்திருக்கிறேன்! 
வெண்ணீராய் என்னுள்ளே பூத்திருக்கிறேன் - நீ 
விலகிடவே உலகு,இகழப் பார்த்திருக்கிறேன்! 
மண்ணூறும் தோண்டிடவே! மறைந்திருப்பதேன்?-நீ 
மன்னித்தே உதவிடவே மறுத்திருப்பதேன்? 

No comments:

Post a Comment