ஒப்பில்லாத் தமிழ்காக்க ஊர்வ லத்தில்
உணர்ச்சியுடன் தமிழ்வாழ்க என்று கூவி
ஒப்புக்கோ செல்கின்றோம்! உணர்வைக் கட்டி
உள்ளத்தே சிந்திப்பீர்! உரிமை கோரல்
தப்பில்லை! தவறியவர் தலையைச் சீவத்
தாம்,முயற்சி செய்வதிலே தகவும் உண்டோ?
எப்பெரிய தவறெனினும் எதிரா ளிக்கு
எடுத்தோதித் திருத்துவதில் இழிவும் உண்டோ? 01
அந்நியரை மட்டுமல்ல அவர்கைக் கொண்ட
அக்கிரம வழிகளையும் கூட இந்தப்
பொன்னிலத்தை விட்டகற்றப் பாடு பட்டுப்
போராடி அகிம்சையினைப் புகுத்தி வாழ்ந்து,
தன்முறையை உலகேற்கச் செய்தார் காந்தி!
தாமுமதைப் பின்பற்றி மார்ட்டின் லூதர்
என்னபலச் சான்றோரும் ஏற்று யர்ந்தார்!
இதையறிந்த பின்னாலும் இம்சை நன்றோ? 02
அந்நியரை மட்டுமல்ல அண்ணல் காந்தி
அகிம்சையினால் தானிந்த அகிலம் வென்றார்!
அந்நிலையே பண்பாட்டின் சிகரம் என்றார்
அகிலத்தின் பலநாட்டார்! அதையே காந்தி
பொன்னாட்டில் நாமின்று புறக்க ணித்தால்
புகழுண்டோ? இழிச்சொல்லும் போமோ சொல்லும்!
முன்னிருந்த நிலைக்கேநாம் செல்வோம் என்றால்
முன்னேற்றம் என்றிதனைச் சொல்லப் போமோ? 03
மொழிநட்டப் படுமென்று மூளுங் கோபம்
முழுநாட்டின் பொருள்நட்டம் ஏற்கப் போமோ?
‘வழிகெட்டுச் செல்வோர்க்கு வாய்ப்பு கள்தாம்
வந்தெளிதிற் கிட்டு’மெனும் வார்த்தை மெய்யோ?
விழிகெட்டோர் போல்ச்சென்று வீழ்வோம் என்று
விழிமூடிச் சென்றழிவை விரும்ப லாமோ?
மொழிப்பற்று பிறமொழியை வெறுப்ப தன்று;
முயன்றுனது மொழிவளர உழைப்ப தன்றோ? 04
செக்கிழுத்துச் சிறைசென்றார் செல்லா மார்க்கம்!
சிந்தித்துப் பலநூற்கள் செய்தார் மார்க்கம்!
திக்கெதிர்த்தும் கப்பலினை விட்டுக் காட்டித்
திருப்பணியைத் தமிழ்க்களித்தார் தேர்ந்த மார்க்கம்!
எக்கொடுமை நேர்ந்தாலும் எடுத்துச் சென்ற
எம்நாட்டுக் கொடியைவிடேன் என்பார் மார்க்கம்!
அக்கறைநம் மொழிமேல நமக்கி ருக்க
அடுத்தமொழி அதைவளர்க்க அடிமை செய்யும்! 05
என்மார்க்கம் என்றிதனைச் சொல்ல வில்லை!
எந்நாடும் மதிக்கின்ற வழியைச் சொல்வேன்!
‘துன்மார்க்கன், கருங்காலி, துணிவில் கோழை,
துப்பில்லான்’ என்றெல்லாம் தூற்ற லாம்நீர்!
வன்மார்க்கம் விட்டகிம்சை வழியில் நிற்க
வலிமிகவும் வேண்டுமுளத் துறுதி வேண்டும்!
நன்மார்க்கம் இதுநமது நாட்டின் மார்க்கம்!
நாமிந்த வழிச்சென்று மொழியும் காப்போம்! 06
†

No comments:
Post a Comment