Thursday, October 20, 2011

சுகம், காப்பு, சொர்க்கம் அவர்..!



நம்பிரான் சங்கீதம் பாடக் கேட்பீர்!
       நம்பியின் சங்கீதம் பாடக் கேட்பீர்!
கும்பிடுவார் சங்கீதம் பாடக் கேட்பீர்!
       குறைதீர்ப்பார் சங்கீதம் பாடக் கேட்பீர்!

நம்பிக்கைச் சங்கீதம் பாடக் கேட்பீர்!
       நம்சபையார் சங்கீதம் பாடக் கேட்பீர்!
எம்மேய்ப்பர் சங்கீதம் பாடக் கேட்பீர்!
       என்றுமுளார் சங்கீத பாடக் கேட்பீர்!

கண்முன்னே வாழ்பவரைப் பாடக் கேட்பீர்!
       கண்காணி யானவரைப் பற்றிக் கேட்பீர்!
விண்மண்ணை ஆளுபவர் பாடக் கேட்பீர்!
       வேதனைகள் தீர்ப்பவரைப் பாடக் கேட்பீர்!

சத்தமுடன் வரும்மேய்ப்பர் பாடக் கேட்பீர்!
       சந்ததமும் உடன்வருவார் பற்றிக் கேட்பீர்!
நித்தமெமக் குணவளிப்பார் பாடக் கேட்பீர்!
       நிறைஞானப் பசிதீர்ப்பார் பற்றிக் கேட்பீர்!

உத்தமர்நம் இரட்சகரைப் பாடக் கேட்பீர்!
       உயிர்க்குதவி செய்பவரைப் பற்றிக் கேட்பீர்!
புத்துணர்ச்சி தருபவரைப் பாடக் கேட்பீர்!
       புகல்,வாசல்,வழியானார் பற்றிக் கேட்பீர்!

குத்தவரும் பகைதீர்ப்பார் பாடக் கேட்பீர்!
       குழவியென நமைச்சுமப்பார் பற்றிக் கேட்பீர்!
மத்தவர்முன் உயர்த்திடுவார் பாடக் கேட்பீர்!
       மாற்றவருக் கில்லாதார் பற்றிக் கேட்பீர்!

பந்தியிருந் துண்பவரைப் பாடக் கேட்பீர்!
       பகைவரைக்கண் டிப்பவரைப் பாடக் கேட்பீர்!
சொந்தமென உயிர்தருவார் பாடக் கேட்பீர்!
       சுகம்,காப்பு * சொர்க்கமவர்  பற்றிக் கேட்பீர்! 
                     (* நிலைவாழ்வு)         

No comments:

Post a Comment