Thursday, October 20, 2011

புதுக்குறள்! ......(புதுக்குமோ..?)




ஒத்தார் இலவயத்திற்கு ஓடினார் மற்றையோர்
செத்தார்,வாக் கற்றோருள் சேர்ந்து!                       1

புத்தேள் உலகின் பொருட்கள் இலவயமாய்
இத்தரைமேற் கொள்ளல் இனிது!                         2

கடல்நீர் எடுத்துக் கரவாது மாரி
கொடல்போலும் கொள்கை அரசு!                        3

ஊழலால் பெற்றபொருள் ஊருள் இறைப்பதுவே
வேளாண்மை என்று விளக்கு!                           4.

ஒப்பி இலவயங்கள் உன்னதாய்க் கொள்ளுவையேல்
இப்பிறப்பில் ஊழலிற வாது!                             5.

ஊருணி நீர்வளைத்தே ஊருக்குள் விற்பவர்க்கே
பேரறி வாளனெனும் பேர்!                               6

பயன்மரம் குத்தகைக்கு விட்டற்றால் வாக்குச்
செயநீங்கள் வாங்கும் பணம்!                            7

மருந்தாம் அரசுமரம் ஊழலால் வெட்டி
அருந்தார் அறிவுடை யார்!                               8

நஞ்சிடுவார் ஊருணியில் நல்லவரும் ஆவாரோ?
அஞ்சிடுவீர் ஊழல் அதை!                               9

உலக நடையறிதல் ஒப்புரவாம்; சூழும்
கலகங்கள் விட்டறிதல் காண்!                           10

                                   ()

No comments:

Post a Comment