ஊழின் வலியதுன் உள்விசு வாசமே!
தாளிற் குறைபடா தாற்று! 1.
தேர்ந்துவினை யாடித் தெரிந்தபயன் கொள்வார்க்கு
நேர்ந்த,ஊழ் இல்லை நினை 2
முயற்சியும் சோம்பலும் மூளுமே ஊழால்
அயர்ச்சிநீ நீக்கல் அறி! 3
ஆகூழ் அறிவுடையோன் ஆதலே! மற்றதுவே
போகூழைப் போக்கும் பொருள்! 4.
போகூழ் அறிவுகொண்டு போக்கு; புகழ்தரும்
ஆகூழைக் கூட்டும் அது! 5.
உண்மை அறிவாலுன் ஊழொழிக்க நீயதன்
நுண்மை அறிந்துசெயல் செய்! 6.
செல்வம் அறிவாய்ச் செயல்பட வல்லார்க்கு
நல்லூழே எல்லாம், நடத்து! 7.
ஒன்றன் இயல்பும் உனதியல்பும் ஓர்ந்தாற்ற
நன்றாகா ஊழில்லை, நம்பு! 8.
கோடி தொகுத்துக் கொடுத்துதவி வாழ்வாரை
ஊடியும் நிற்குமோ ஊழ்! 9.
வகுத்தாற்றும் வாழ்வறியான் வைத்திழப்பான்! ஊழை
மிகுத்தேற்றிப் பேசார் துணிபு! 10
நன்றாக்கித் தீதொரீஇ நாளாக்க வல்லார்க்கிங்கு
என்றுமே ஊழெதுவும் இல்! 11
உறக்கண்டார் ஊழும் உதவியாய், இன்பம்
பெறக்கொண்டார்; வேறெவர்க்கப் பேறு 12
(ஊழ் முற்றியது!)
(†)
No comments:
Post a Comment