ஆண்டவ ரே!என் ஆயருமாம்!
அவரால் குறைகள் அகன்றிடுமாம்;
தீண்டிய இடத்தில் நீர்வருமாம்;
தெளிவோ(டு) அமைதி தினம்வருமாம்;
மீண்டும் மீண்டும் புத்துணர்ச்சி
மேல்வரச் செய்தென் கைப்பிடித்தே
யாண்டும் நீதி வழிநடத்தி
நரகில் இருந்தும் காப்பவராம்;
கண்முன் சாவே வந்தாலும்
களைப்பும் சோர்வும் நேர்ந்தாலும்
மண்மேல் பகைவர் சூழ்ந்தாலும்
மழையாய்த் துயர்கள் தந்தாலும்
உண்மைக் கோலோ டெனக்காக்க
உடன்வரு கின்றார் கர்த்தருமே!
தண்மைப் பசும்புல் வெளிநடத்தித்
தாங்கும் அவர்கைக் கனிவுடனே!
துஞ்சேன்! துவளேன்! அவர்கருணை
தொடர்ந்து வழியும் பாத்திரம்நான்!
அஞ்சேன்! அழியேன்! பேரன்பும்,
அருளும் நலமும், அவர்தர,நான்!
விஞ்சேன் அவர்கை மீறியெதும்
விரும்பிப் போக மாட்டேனே!
செஞ்சே வடிக்கீழ் நிலையாய்நான்
சிறப்போ டென்றும் வாழ்வேனே!
†
No comments:
Post a Comment