Thursday, October 20, 2011


பொருளென நடக்கும்  போது...
              ஆண்டவர் மனத்துள் தோன்றி, அடிமனக் குரலாய் நின்று
              தூண்டிடும் செயலை ஏற்றுத், துடிப்புடன் முனைதல் நன்று!
              அருளெனக் கிடைத்த வாக்கை, அன்புடன் ஏற்றுக் கொண்டு
              பொருளென நடக்கும்  போது, புகழ்வரும் துன்பம் வாரா!
                                
                       திண்டாட வேண்டாம்..!
              தொண்டாற்றி னேன்நானும் தூயதமிழ்க்கு என்றால்கற்
              கண்டு,இனிமை என்நாவால் கண்டதெனக் -கொண்டாற்போல்!
              வண்டாடி எம்மலரும் வாசம் பரப்பிடுமோ?
              திண்டாட வேண்டாம் திகைத்து!

No comments:

Post a Comment