Thursday, October 20, 2011

கவிச்சுரபி சந்திரசேகரனுக்கு....




வெட்டித் தைக்கா வெள்ளுடை அணிய
       விரும்பும் தமிழரில் முதல்வன்! கை
தட்டிப் புகழும் தகுதிகள் கொண்ட
       தங்கத் தமிழின் கவிஞன்!

கொட்டிக் கிடக்கும் கற்பனை வளங்கள்
       கொண்டு தரும்நற் கலைஞன்! கை
பட்டுத் தமிழும் பளிச்சிடும் இவனால்,
       பலருள் வாழும் நிலைஞன்!

வெள்ளை ஒருநிறம் இல்லை என்பதை
       வெளிவரச் செய்தைவ் வறிஞன்
கொள்ளை இடுவது கூடும் மனங்களை!
       குவலயத் திவனிலை வறிஞன்!

ஏங்கிக் கவிதை எங்கெனத் தவிக்கும்
       இளஞரின் வாயினில் தமிழைத்
தாங்கிப் பிடித்துத் தாய்போல் ஊட்டும்
       தகவினில் இவனருள் முலைஞன்!


       வாழ்க! வளர்க! சிறக்க! ஓங்குக! செழிக்க

                     என் வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment